திடீரென சமந்தா மயங்கி விட்டார்!! அவ்வளவு பிரச்சனை.. நடிகர் சொன்ன ஷாக்கிங் தகவல்

Samantha Tamil Cinema Actress
By Bhavya Nov 12, 2024 04:30 AM GMT
Report

சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமானார்.

இவர் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பிரச்சனை மற்றும் உடல் நிலை குறைவாலும் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். தற்போது, மீண்டும் ராஜ்&டிகே இயக்கத்தில் கடந்த 7 ம் தேதி வெளியான சிட்டாடல் என்ற வெப் தொடரில் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ளார்.

திடீரென சமந்தா மயங்கி விட்டார்!! அவ்வளவு பிரச்சனை.. நடிகர் சொன்ன ஷாக்கிங் தகவல் | Actor Talk About Samantha On Shooting Spot

இந்த தொடர் அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் வருண் தவான் சமந்தா குறித்து சில அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

அதிர்ச்சி தகவல்

அதில், "சிட்டாடல் ஷூட்டிங்கின் போது சமந்தா திடீரென அவரது கண்களை மூடிக்கொண்டார் அப்போது ஸ்பாட்டுக்கு திடீரென ஒரு ஆக்சிஜன் டேங்க் வந்தது. அந்த டேங்க்கிலிருந்து ஆக்சிஜன் எடுத்துக்கொண்டார்.

அவர் நினைத்திருந்தால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பி சென்றிருக்கலாம் ஆனால் மிகவும் தைரியமாக அவர் போராடி வருகிறார். அவரை நினைக்கும்போது மிகவும் கவலையாக உள்ளது.

திடீரென சமந்தா மயங்கி விட்டார்!! அவ்வளவு பிரச்சனை.. நடிகர் சொன்ன ஷாக்கிங் தகவல் | Actor Talk About Samantha On Shooting Spot

மேலும், சைபீரியாவில் இருக்கும் ரயில் நிலையத்தில் நான் ஓட வேண்டும் என்னை பின் தொடர்ந்து சமந்தா வர வேண்டும் ஆனால் அவர் அந்த நேரத்தில் மயங்கி விழுந்து விட்டார். அவருக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு முன் எனது பிரச்சனைகள் எல்லாம் ஒன்றும் இல்லை" என்று கூறியுள்ளார்.