ஆணவத்தில் ஆடிய விஜய்.. தூக்கிவிட்ட இயக்குனரை 26 ஆண்டுகளாக ஒதுக்க இது தான் காரணம்..
தமிழ் சினிமாவில் குடும்பங்களை வைத்து இயக்கும் கமர்ஷியல் இயக்குனர்களில் 90ஸ் காலத்தில் பிரபலமானவர் விக்ரமன். புது வசந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். முதல் படமே தமிழ்நாடு விருது, பிலிம்ஃபேர் விருது என்று விருதுகளை தட்டினார்.
இதன்பின் பெரும் புள்ளி, நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம் போன்ற படங்களை இயக்கினர். பின் நடிகர் விஜய் வளர்ந்து வரும் காலக்கட்டமான 90களில் இவர் இயக்கத்தில் புதிய கீதை படத்தில் நடித்தார். படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விஜய்யின் வளர்ச்சிக்கு உதவியது.

இதன்பின் விக்ரமன், சூர்யவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல போன்ற அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்தார். இதைதொடர்ந்து விஜய்யுடன் 2000ஆம் ஆண்டு ஒரு படத்தினை இயக்க ஆரம்பித்து, ஒரு பாடல் காட்சி என படப்பிடிப்பு சென்றுள்ளது.
அப்போது கதையில் சில மாற்றங்களை கூறியுள்ளார் விஜய். என்னால் மாற்ற முடியாது என்று விக்ரமன் கூற வேறு படத்திற்கு செல்லுங்கள் என்று கூறிவிட்டாராம் விக்ரமன். அதே கதையில் தான் நடிகர் சூர்யா நடிப்பில் உன்னை நினைத்து படம் உருவாகி வெற்றியும் பெற்றது.
இப்படத்தின் மூலம் சூர்யாவின் மார்க்கெட்டும் எகிறியது. இதன்பின் விஜய் கடந்த 20 வருடங்களாக விக்ரமன் அவர்களை ஒதுக்கியே வருகிறார். விக்ரமன் 2014 ஆண்டுக்கு பின் எந்த படத்தினையும் இயக்கமுடியாமல் இருந்து வருகிறார்.