ஆசையாய் வாங்கிய சொகுசு கார்கள்!! ரோல்ஸ் ராய்ஸ்-ஐ விற்கப்போகும் நடிகர் விஜய்..

Vijay Rolls-Royce Greatest of All Time
By Edward Aug 03, 2024 03:45 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தினை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகி முழு அரசியலில் ஈடுபடவும் இருக்கிறார். நடிகர் விஜய் 2012ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வகை சொகுசு காரை வாங்கியிருந்தார்.

ஆசையாய் வாங்கிய சொகுசு கார்கள்!! ரோல்ஸ் ராய்ஸ்-ஐ விற்கப்போகும் நடிகர் விஜய்.. | Actor Vijays Luxury Rolls Royce Car Is Up For Sale

காரை வாகன பதிவிற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போது அந்த காருக்கு நுழைவு வரி செலுத்தும் படி வணிக வரித்துறையினர் உத்தரவிட்டனர். வெளிநாட்டில் இறக்குமதியான காருக்கு நுழைவு வரி கட்ட வேண்டும் என்ற சட்டம் இருப்பதால் அதை கட்ட கோரினர்.

இதனால் அதிர்ச்சியான விஜய் நுழைவு வரியை ரத்து செய்யவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். காரின் விலையை விட இறக்குமதி வரி, சாலை வரி என்று பல வரிகளால் தொகை அதிகமாக இருந்ததால் வழக்கு போட்டார். மனுதாரர் புகழ்பெற்றவர் என்பதால் சரியான நேரத்தில் வரி செலுத்தினால் தான் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் என்று 2 லட்சம் ரூபாய் அபராதமும் வித்து வரியை கட்ட சொல்லியிருந்தனர்.

ஆசையாய் வாங்கிய சொகுசு கார்கள்!! ரோல்ஸ் ராய்ஸ்-ஐ விற்கப்போகும் நடிகர் விஜய்.. | Actor Vijays Luxury Rolls Royce Car Is Up For Sale

இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை 3.5 கோடி ரூபாய்-க்கு ஆசையாசையாய் வாங்கினார். இந்நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் Empire Autos என்ற ப்ரீமியம் கார் டீலர்ஷிப்பில் விற்பனைக்கு விற்றிருக்கிறார் விஜய். தற்போது அந்த நிறுவனத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் ஷேர் செய்யப்பட்டு 2.6 கோடி ரூபாய்க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்