நியூயார்க்கில் இளம்பெண்ணுடன் நள்ளிரவில் ஊர்சுற்றி மாட்டிக்கொண்ட நடிகர் விஷால்!! உண்மையில் நடந்தது இதுதான்..

Vishal Viral Video New York Tamil Actors
By Edward Dec 28, 2023 03:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஷால், பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்திருந்தார் விஷால். 40 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் விஷால் சில ஆண்டுகளுக்கு முன் நிச்சயம் வரை சென்று பின் திருமணம் நின்று போனது.

அதன்பின் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டியப்பின் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். இதை வைத்து பலர் கிண்டல் செய்து வந்த நிலையில், விஷால் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் லீக்கானது.

நியூயார்க்கில் இளம்பெண்ணுடன் நள்ளிரவில் ஊர்சுற்றி மாட்டிக்கொண்ட நடிகர் விஷால்!! உண்மையில் நடந்தது இதுதான்.. | Actor Vishal Explain About His Recent Viral Video

அதாவது நியூயார்க் நகரில் இளம்பெண் ஒருவருடன் நள்ளிரவில் ஊர்சுற்றியிருக்கிறார் விஷால். இதை சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வைரலாக்கினர். இந்நிலையில் அந்த வீடியோ குறித்து விஷால் விளக்கமளித்துள்ளார். அதில், மன்னிக்கவும் நண்பர்களே, சமீபத்தில் வெளியான வீடியோவை பற்றி உண்மையை கூற வேண்டிய நேரம்.

ஆம், நான் நியூயார்க்கில் இருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் மன அமைதிக்காக என் உறவினர்களுடன் இங்கு வருவது வழக்கம் என்பதை சடங்காகவே பின்பற்றி வருகிறேன். கிறிஸ்மஸ் அன்று என் உறவினர்களால் பிராங்க் செய்ய முடிவு செய்து, அவர்கள் உருவாக்கப்பட்ட வீடியோ தான் அது.

கதை கேட்டு வேண்டாம்-னு அனுப்பிய நடிகர் விஜய்!! இயக்குனர் கூறிய உண்மை...

கதை கேட்டு வேண்டாம்-னு அனுப்பிய நடிகர் விஜய்!! இயக்குனர் கூறிய உண்மை...

என்னுள் குழந்தைத்தன்மை இருப்பதை வெளிக்கொண்டு வர நல்ல உணர்வை ஏற்படுத்தும் என்பதால் அதை செய்தேன். உங்களின் ஊகங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கிறேன். இதைவைத்து சிலர் என்னை டார்கெட் செய்ய முயன்றதாகவும் ஆனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, லவ் யூ ஆல் என்று அந்த எக்ஸ் தள பதிவில் கூறியிருக்கிறார் விஷால்.