குடிச்சிட்டு மேடையில ஏறுனீங்களா!! சர்ச்சைக்கு புற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷால்..
நடிகர் விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஷால் பல படங்களில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தார். நடிகர் சங்க பொறுப்பில் இருந்து வந்த விஷால், சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் நடந்த திருநங்கை அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது மேடையில் நின்று கொண்டிருந்த விஷால் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் பதறியபடி விஷாலை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். விஷாலும் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனதால் தான் அப்படியானதாக கூறப்பட்டது. ஆனால், விஷால் குடித்துவிட்டு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று சிலர் கருத்துக்களை கூறி விமர்சித்து வந்தனர்.
சர்ச்சைக்கு புற்றுப்புள்ளி
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியொன்றில், அங்கு என்ன நடந்தது என்று மதகதராஜா படத்தின் நிகழ்சியில், முடியாமல் பேசியது என்று கூறியுள்ளார். அதில், அந்த நாளுக்கு முன்பே எனக்கு காய்ச்சல் இருந்தது. மருத்துவர் என்னை எங்கும் போகக்கூடாது என்று கூறினார். ஆனால் 12 வருடத்திற்கு பின் படம் ரிலீஸாக போதுன்னு சொல்லியும் போக வேண்டாம், அங்கு ஏசி எல்லம் இருக்கும் என்று சொன்னார்.
பிரஸ் மீட் நிகழ்ச்சியில் அவர் சொன்னது போல் அப்படியே எனக்கு ஆச்சு என்று விஷால் கூறியுள்ளார். மேலும் குடித்துவிட்டு வந்துட்டாரு என்று சிலர் கூறினார்கள். அதுபற்றி என்ன நினைக்கிறீங்க என்ற கேள்விக்கு, ஒரு டாக்டர் 3 மாசம் என்னால் எந்திரிக்க முடியாதுன்னு சொன்னாரு, இன்னொரு டாக்டர் 6 மாசம் எந்திரிக்க முடியாது, அவருக்கு நர்வர்ஸ் பிராபலம் என்று சொன்னாங்க.
அது எப்படி, சிலர் அவர்கள் கற்பனைக்கு சென்று என்ன வேணாலும் பேசுடுறாங்க. 2 வருடத்திற்கு முன்பே குடிப்பதை நிறுத்திவிட்டேன், புகைப்பிடிப்பதை 5 வருடத்திற்கு முன்பே நிறுத்திவிட்டேன், நான் பார்ட்டிக்கே போறது கிடையாது. நான் கடைசியா சுந்தர் சி சார் பர்த்டே பார்ட்டிக்கு தான் போனேன் என்று விஷால் தெரிவித்துள்ளார்.