சோறுபோட்டு வளர்ந்தவரை அம்போனு கைகழுவிய சூரி!! ஆணவத்தில் ஆடியதை போட்டுடைத்த பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் சூரி. பல படங்களில் முகம் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தார் நடிகர் சூரி. முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்த சூரி, விடுதலை படத்தின் மூலம் கதாநாயகான வெற்றிமாறன் அறிமுகம் செய்துள்ளார்.
விடுதலை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வரும் நிலையில் சூரி பற்றி உண்மையை போட்டுடைத்துள்ளார் நடிகர் போண்டாமணி. சில மாதங்களாக உடல்நிலை மோசமாகி படுத்தபடுக்கையில் இருந்து தற்போது மீண்டு வந்திருக்கிறார் போண்டாமணி.

அவருக்கு ஒருசில பிரபலங்கள் மட்டுமே உதவி செய்திருந்தனர். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சூரி நான் செய்த உதவிகளை மறந்து நன்றி கெட்டவனாக மாறியிருப்பதாக தன்னுடைய ஆதங்கத்தை கூறியிருக்கிறார்.
சென்னைக்கு வந்த சூரியை தன் வீட்டில் வைத்து சாப்பாடு எல்லாம் போட்டு பார்த்துக்கொண்டதாகவும், அந்த சமயத்தில் சூரி நடிக்கும் போது 200 ரூபாய் சம்பளமாக கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
அப்படி சூரியை பார்த்து வந்த போண்டாமணி, மருத்துவமனையில் இருக்கும் போது கூட அவரை பார்க்காமலும் உதவி செய்யாமலும் இருந்திருக்கிறாராம். இதனால் ஒரு போன் செய்து கேட்கக்கூட இருந்ததால் நன்றி கெட்டவன் என்று மன வேதனையில் போண்டாமணி கூறியிருக்கிறார்.