விபத்தில் சிக்கிய மகன்.. பவன் கல்யாணின் மனைவி செய்த உணர்ச்சிபூர்வ செயல் வைரல்

Pawan Kalyan Actors
By Bhavya Apr 14, 2025 07:30 AM GMT
Report

பவன் கல்யாணின்

தெலுங்கு சினிமா நடிகரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாணின் வீட்டில் சமீபத்தில் ஒரு விபத்து. அதாவது அவரது இளைய மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.

சமீபத்தில் பள்ளியில் தீ விபத்து ஏற்பட அதில் பவன் கல்யாணின் மகன் ஷங்கர் சிக்கியுள்ளார். அவருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

விபத்தில் சிக்கிய மகன்.. பவன் கல்யாணின் மனைவி செய்த உணர்ச்சிபூர்வ செயல் வைரல் | Actor Wife Did Something For Her Son Well Being

செய்த செயல்

தற்போது இவர் நலமுடன் இருக்கும் நிலையில், முழுமையாக குணமடைய வேண்டும் என்பதற்காக பவன் கல்யாணின் மனைவியும் அம்மாவுமான அன்னா லெஷ்னேவா கொனிடேலா, திருமலை கோவிலில் வெங்கடேசப் பெருமானை தரிசனம் செய்துள்ளார். 

தன் மகனுக்காக முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.