காசு முக்கியம்ன்னு தயாரிப்பாளருக்கு நாமம் போட்ட 5 நடிகர்கள்.. சிம்புவை விடாது துறத்தும் பிரச்சனை
சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தில் நடிகர் நடிகைகள் கமிட்டாகினால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வண்ணம் படத்தினை முடித்து கொடுக்க வேண்டும்.
ஆனால் அப்படி சில நடிகர் நடிகைகள் ஆணவத்தில் தான் தான் பெரியவன் என்று நினைத்து முறையாக ஷூட்டிங்கிற்கு வராமல் ஷூட்டிங்கில் எல்லைமீறியபடி நடந்து கொள்வது போன்ற தேவையற்ற செயலில் ஈடுபட்டு தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவார்கள்.
அப்படி சமீபத்தில் வடிவேலு ரெட் கார்ட் போடப்பட்டு சினிமாவில் இருந்து 4 ஆண்டுகள் ஒதுக்கி வைக்கப்பட்டார். தற்போது அவரை போல் ரெட் கார்ட்டில் சிக்கியுள்ளார்கள் முன்னணி டாப் நடிகர்கள்.
திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு முறையான ஒத்துழைப்பு கொடுக்காததால் விஷால், எஸ் ஜே சூர்யா, சிம்பு, யோகி, அதர்வா போன்ற நடிகர்களிடம் விளக்கத்தை கேட்டு தமிழ் திரைப்பட துறை தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
அவர்கள் அனைவரும் முறையாக விளக்கம் அளிக்கவில்லை என்றால் ரெட் கார்டு விதிக்கவும் தயாரிப்பாளர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தற்போது தான் அனைத்து பிரச்சனைகளில் இருந்து தப்பித்து ரீஎண்ட்ரி கொடுத்திருக்கிறார் சிம்பு. அதற்கு குள் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்க்கு வாக்கு கொடுத்த சில படத்தின் பிரச்சனையால் மீண்டும் முறுங்கை மரம் ஏறியிருக்கிறார் சிம்பு.
இந்த சிக்கலில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஜெயப்பிரகாஷ் போன்ற நடிகர்களும் அட்வான்ஸ் வாங்கி நடிப்பதாக கூறி ஏமாற்றியிருக்கிறார்களாம். மேலும் அதர்வா செம போத ஆகாதே என்ற படத்தில் 5.5 கோடி வாங்கி அப்படத்தை முடித்துள்ளார்.
ஆனால் அப்படம் தோல்வியானதால் வேறொரு படம் பண்ணீ தருவாக சொல்லி 50 லட்சம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு நடித்து கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறாராம்.
இதில் நடிகர் யோகி பாபு ஒரு படத்தில் நடித்து முடித்து காசும் வாங்கிவிட்டு டப்பிங்கிற்கு வராமல் இருந்துள்ளார்.