விவாகரத்து செய்து பின் காதலில் விழுந்த நடிகர் - நடிகைகள்!! மலைக்கா முதல் நாக சைதன்யா வரை..

Amala Paul Naga Chaitanya Gossip Today Aamir Khan Hrithik Roshan
By Edward Aug 14, 2024 11:00 AM GMT
Report

சினிமா பிரபலங்கள் ஒன்றாக ஒரே படத்தில் ஜோடியாக நடித்து பின் இருவரின் கெமிஸ்ட்ரியும் மக்களுக்கு பிடித்து போக இருவரும் காதலித்து திருமணம் வரை செய்து கொள்வார்கள். அப்படி திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றும் விடுகிறார்கள். அப்படி ஒரு உறவு முடிந்தப்பின் வேறொரு துணையை சீக்கிரமாக கண்டுபிடித்து இரண்டாம் கல்யாணத்தையும் செய்துவிடுவார்கள். அப்படி முதல் வாழ்க்கைக்கு பின் இரண்டாம் வாழ்க்கைக்கு தயாராகி திருமணம் செய்தவர்களின் லிஸ்ட்டில் யார் இருக்கிறார் என்பதை பார்ப்போம்...

விவாகரத்து செய்து பின் காதலில் விழுந்த நடிகர் - நடிகைகள்!! மலைக்கா முதல் நாக சைதன்யா வரை.. | Actors Who Fell Back In Love After Divorce

சமீபகாலமாக இணையதளமே திரும்பி பார்க்க வைத்த செய்தி என்றால் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் தான். நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்த நாக சைதன்யா 4 ஆண்டுகளுக்கு பின் விவாகத்து பெற்று பிரிந்தார். அதன்பின் சில ஆண்டுகள் கழித்து நடிகை சோபிதா துலிபாலாவை ரகசியமாக காதலித்து சமீபத்தில் நிச்சயதாத்தத்தை செய்து இரண்டாம் கல்யாணத்திற்கு தயாராகிவிட்டார்.

விவாகரத்து செய்து பின் காதலில் விழுந்த நடிகர் - நடிகைகள்!! மலைக்கா முதல் நாக சைதன்யா வரை.. | Actors Who Fell Back In Love After Divorce

பாலிவுட் கிளாமர் நடிகை மலைக்கா அரோரா தன்னுடைய கணவரும் தயாரிப்பாளருமான அர்பாஸ் கானை 18 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்து கடந்த 2016ல் இருந்து நடிகர் அர்ஜுன் கபூருடன் காதலில் இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக இருவரும் காதலில் இருந்து திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்கள். அர்பாஸ் கானும் ஓப்பனைக்கலைஞர் ஷுரா கானை கடந்த டிசம்பர் மாதம் மணந்தார்.

பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷன், Sussanne Khan என்பவரை திருமணம் செய்து 2014ல் விவாகரத்து செய்து பிரிந்தார். 14 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த ஹிருத்திக் ரோஷன், அதன்பின் 2022ல் சபா ஆசாத்துடன் கைக்கோர்த்து வெளியில் சென்று வருகிறார். இருவரும் காதலித்து தற்போது லிவ்விங் வாழ்க்கையில் இணைந்து வருகிறார்கள். மேலும், Sussanne Khan நடிகர் அர்ஸ்லான் கோனியுடன் காதலில் இருந்து வருகிறாராம்.

விவாகரத்து செய்து பின் காதலில் விழுந்த நடிகர் - நடிகைகள்!! மலைக்கா முதல் நாக சைதன்யா வரை.. | Actors Who Fell Back In Love After Divorce

பாலிவுட் டாப் நடிகர் சைஃப் அலிகான் 1991 அம்ரிதா சிங்கை திருமணம் செய்து 13 ஆண்டுகளுக்கு பின் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின் 2007 நடிகை கரீனா கபூரை காதலித்து வந்த சைஃப் அலிகான் 2012ல் திருமணம் செய்தார்.

பாலிவுட் நடிகர் அமீர்கான் முதல் மனைவி ரீனா தத்தாவுடன் 16 ஆண்டுகள் வாழ்ந்து பின் விவாகரத்து செய்தார். அதன்பின் திரைப்பட இயக்குனர் கிரண் ராவ்-ஐ திருமணம் செய்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட 10 ஆண்டுகளுக்கு பின் 2021ல் விவாகரத்து செய்தனர். தற்போது தங்கல் படத்தில் நடித்த நடிகையுடன் காதலில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

விவாகரத்து செய்து பின் காதலில் விழுந்த நடிகர் - நடிகைகள்!! மலைக்கா முதல் நாக சைதன்யா வரை.. | Actors Who Fell Back In Love After Divorce

மேலும் நடிகை அமலா பால் இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார். அதன்பின் பல ஆண்டுகள் கழித்து தன் காதலர் ஜகத் தேசய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து குழந்தையையும் பெற்றெடுத்தார்.