34 வயது ஆனால் சிங்கிள்.. விடாமுயற்சி வில்லி ரெஜினாவின் எதிர்பாராத பதில்
ரெஜினா
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெற்றிகரமாக படங்கள் நடிக்கும் நடிகைகள் பலர் உள்ளார்கள் அதில் ஒருவர் தான் நடிகை ரெஜினா கசான்ட்ரா.
2005ம் ஆண்டு தமிழில் வெளியான கண்ட நாள் முதல் படத்தின் மூலம் நடிக்க தொடங்கியவர் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார்.
அதை தொடர்ந்து, அஜித் நடிப்பில் நேற்று வெளியான விடாமுயற்சி படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார் ரெஜினா.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் ரெஜினா தான் 34 வயதிலும் சிங்கிள் ஆக தான் இருப்பதாக கூறி இருக்கிறார். ரெஜினா இவ்வாறு கூறியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உடைத்த ரகசியம்
அதில், "எப்போது திருமணம் செய்ய போகிறாய் என என் அம்மாவே இதுவரை கேட்டதில்லை. அந்த கேள்வியை மற்றவர்கள் கேட்டாலும் நான் அதை தான் சொல்வேன். 'என் அம்மாவே கேட்கவில்லை, உங்களுக்கு என்ன' என கேட்பேன்.
ரிலேஷன்ஷிப்பில் இருப்பது மிகவும் கடினமான ஒன்று. காலம் போகப்போக friendship ஈஸியான ஒரு விஷயமாக இருக்கும்" என ரெஜினா கூறி இருக்கிறார்.