யாரும் எனக்கு அதை செய்ய முயற்சிக்க வேண்டாம்!! வெறுப்புடன் பேசிய நடிகை ஐஸ்வர்யா..

Aishwarya Lekshmi Tamil Actress Ponniyin Selvan 2 Actress
By Edward Oct 05, 2024 08:30 AM GMT
Edward

Edward

Report

ஐஸ்வர்யா லட்சுமி

மலையாள சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ஆக்‌ஷன், ஜகமே தந்திரம், கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

யாரும் எனக்கு அதை செய்ய முயற்சிக்க வேண்டாம்!! வெறுப்புடன் பேசிய நடிகை ஐஸ்வர்யா.. | Actress Aiswarya Lekshmi Reply Ask Whos Your Love

தமிழ், தெலுங்கு, மலையால சினிமாவில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி தக் லைஃப் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லால் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் லைவ் சேட்டில் இருந்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் ஐஸ்வர்யா.

யாரும் எனக்கு அதை செய்ய முயற்சிக்க வேண்டாம்!! வெறுப்புடன் பேசிய நடிகை ஐஸ்வர்யா.. | Actress Aiswarya Lekshmi Reply Ask Whos Your Love

காதலிக்கிறீர்களா

சமீபத்தில் அவர் அளித்த லைவ் சேட்டில், யாரையாவது காதலிக்கிறீர்களா? என்ற கேள்வியை ஒருவர் கேட்டிருக்கிறார். அதற்கு ஐஸ்வர்யா லட்சுமி, தன்னை பார்க்கும் அனைவரும் யாரையாவது காதலிக்கிறீர்களா? என்ற ஒரே கேள்வியையே கேட்பதாக வெறுப்புடன் பதிலளித்திருக்கிறார்.

தான் இப்போது சிங்கிளாகவே இருப்பதாகவும் யாரையும் தன்னுடன் ஜோடி சேர்க்க முயற்சிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். ஏற்கனவே நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் இணைத்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி இப்படியான ரியாக்ஷனை கொடுத்திருக்கிறார்.