பெரிய பிரச்சனை, பிரேக் அப்!! சீரியல் நடிகை ஆல்யா மானசா - சஞ்சீவ் பகிர்ந்த திடுக்கிடும் தகவல்

Alya Manasa Sanjeev Karthick Actress
By Bhavya Jan 24, 2025 10:30 AM GMT
Report

 ஆல்யா மானசா- சஞ்சீவ்

பிரவீன் பென்னட் இயக்கத்தில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வெளிவந்த தொடர் ராஜா ராணி.

இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் மாபெரும் ஹிட் கொடுத்த தொடர்களில் ஒன்று. இந்த சீரியல் மூலம் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின் திருமணம் செய்து கொண்டனர்.

பெரிய பிரச்சனை, பிரேக் அப்!! சீரியல் நடிகை ஆல்யா மானசா - சஞ்சீவ் பகிர்ந்த திடுக்கிடும் தகவல் | Actress Alya About Her Breakup

இந்த ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அண்மையில் பிரம்மாண்ட வீடு கட்டினார்கள், விலையுயர்ந்த கார் மற்றும் போட் ஹவுஸ் என வாங்கினார்கள்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் சீரியல் நடிகர் சஞ்சீவ் அவர் காதலித்த காலத்தில் அவருக்கும் ஆல்யாவிற்கும் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

திடுக்கிடும் தகவல்

அதில்," நாங்கள் காதலிக்கும் போது ஒரு பெரிய பிரச்சனை ஏற்பட்டது, அது பெரிய பிரளயமாக மாறியது. இதனால் ஆல்யா நான் சீரியலில் நடித்தால் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டார்.

வீட்டில் இருந்து பெற்றோரை அழைத்து வந்து பெரிய பிரச்சனை செய்து விட்டார். இதனால் ராஜா ராணி சீரியல் நிற்கும் அளவிற்கு ஆனது.

அந்த பிரச்சனையில் இவர் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் வீசிங் வந்துவிட்டது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பெரிய பிரச்சனை, பிரேக் அப்!! சீரியல் நடிகை ஆல்யா மானசா - சஞ்சீவ் பகிர்ந்த திடுக்கிடும் தகவல் | Actress Alya About Her Breakup

அப்போது நான் நடித்த கதாபாத்திரத்தில் வேறொரு நடிகரை வைத்து நடிக்க வைத்தார்கள், என் கண்முன்னே ஆடிஷனும் நடந்தது.

அப்போது முழு பிரேக்கப்பில் நாங்கள் இருந்தோம். பின் ஆல்யாவே எனது நண்பர் மூலம் தூதுவிட்டு பேச ஆரம்பித்தார், இதெல்லாம் ஒரே வாரத்தில் நடந்து முடிந்தது" என கூறியுள்ளார்.