அந்த நபர் என் டி -ஷர்ட் உள்ளே கைவிட்டார், அப்போ பக்கத்தில் அப்பா இருந்தார்!! நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்

Andrea Jeremiah Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Mar 01, 2024 12:54 PM GMT
Report

தன்னுடைய வித்தியாசமான குரலால் பல ரசிகர்களை கட்டிப்போட்ட ஆண்ட்ரியா, தனது நடிப்புத் திறனாலும் தமிழக ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தவர்.

மற்ற ஹீரோயின் போல் இல்லாமல் அதிகம் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த நபர் என் டி -ஷர்ட் உள்ளே கைவிட்டார், அப்போ பக்கத்தில் அப்பா இருந்தார்!! நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக் | Actress Andrea Jeremiah About Sexual Harrasment

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஆண்ட்ரியா, தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "நான் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது எனது அப்பாவும் அருகில் அமர்ந்திருந்தார். எனக்கு அப்போது 11 வயதுதான் இருக்கும். நான் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்திருந்தேன்".

"திடீரென ஒரு கை எனது டி-ஷர்ட் உள்ளே வருவது போன்று உணர்ந்தேன். நான் உடனே கொஞ்சம் முன்னாடி வந்து அமர்ந்தேன் அவ்வளவுதான். இதை குறித்து என்னுடைய அப்பாவிடமும், அம்மாவிடமும் தெரிவிக்கவில்லை. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை" என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார்.  

You May Like This Video