தொழிலதிபர் உடன் திருமணம், அமெரிக்காவில் செட்டில் .. நடிகை அஞ்சலி ஓபன் டாக்

Anjali Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jan 09, 2024 01:40 PM GMT
Report

இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் 2007 -ம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி.

இவர் தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அஞ்சலி பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஞ்சலி தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்றும் கமிட்டான படங்களில் நடிக்க மட்டுமே இந்தியா வந்து செல்வதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய அஞ்சலி, சினிமாவில் எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாருடன் எப்படி எழுத வேண்டும் என்று முடிவு செய்துவிடுவார்கள்.

முதலில் நடிகர் ஜெய் உடன் காதலில் இருந்ததாக தகவல வெளிவந்தது. இப்போது ஒரு தொழிலதிபரை வைத்து இப்படி பேசுகிறார்கள். எங்கள தெரியாமல் திருமணம் ஆகிவிட்டதாகவும் தகவல் வந்து கொண்டு இருக்கிறது என்று அஞ்சலி கூறியுள்ளார்.