கணவருடன் ஜப்பான் டூர்! விவாகத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சாந்தினி...
Chandini Tamilarasan
Japan
Tamil Actress
Actress
Tokyo
By Edward
சந்தினி
நடிகர் சாந்தனுவின் 'சிந்து +2' படத்தில் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் சாந்தினி. அதன்பின், பல படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வந்த சந்தினி கடந்த 2018ல் நந்தா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
தற்போது Fire என்ற படத்தில் நடித்துள்ள சாந்தினி அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
அதில் கணவருடன் போட்டோஸ் போடாததற்கு, எங்களின் பிரைவேட் விசயங்களை சோசியல் மீடியாக்களில் போடுவதில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தன் கணவருடன் ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை சாந்தினி.