அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கு...40 வயசு டைரக்டர் கிட்ட உஷாரா இருக்கணும்!! நடிகை தீபா பாஸ்கர் ஓபன் டாக்.
சினிமாவில் நடிக்கும் நடிகைகள் தற்போது சினிமாவில் நடக்கும் பல பிரச்சனைகள், தொல்லைகள் பற்றி ஓபனாக பேசி வருகிறார்கள். அந்தவரிசையில் பல படங்களில் நடித்து வரும் நடிகை தீபா பாஸ்கர் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
தீபா பாஸ்கர்
அதில், சினிமாவில் என்னுடன் கணவராக நடிப்பவர்களை உண்மையான கணவர்ன்னு நினைச்சுக்கிட்டு பேசுவாங்க. கர்ணன் படத்தில் நடிக்க கமிட்டாகி திருநெல்வேலிக்கு கிளம்பி சென்றேன். மார்கழி மாசம், அவ்வளவு குளிரில், நிறைய அடி வாங்கினேன். அப்படி நடித்தேன், ஒரு சீனில் கூட நான் இல்லை.
மாரி செல்வராஜ் ஊர் மக்கள் நடித்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று என் காட்சியை வைக்கவில்லை. இதை முன்பே அவர்கள் சொல்லி இருக்கலாம், சாப்பாட்டுக்கு ரொம்ப ஷூட்டிங்கில் கஷ்டப்பட்டோம் என்று தெரிவித்துள்ளார். நான் நடித்த படங்களில் இருந்து இன்னும் ஒன்றரை லட்சம் பேமெண்ட் வரவேண்டி இருக்கு. ஒரு படம் ரிலீஸாகிடுச்சி இன்னும் சம்பளம் கொடுக்கல.
மேலும் பேசிய நடிகை தீபா, படம் என்றால் என்ன என்று தெரியாத சமயத்தில் 2, 3 இடத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் வந்து இருக்கு. அதன்பின் தெரிந்து கொண்டேன். பெரிய இயக்குநர்கள் பெயர் போட்டு பல ஏஜெண்ட்டுகள் ஏமாத்துறாங்க, இந்த இயக்குநர் ஓட்டலுக்கு வர சொல்றாங்கன்னு சொல்வாங்க.
புது இயக்குநர் ஒருவர் போட்டோவை பார்த்து பிடித்து இருக்குன்னு சொன்னாங்க. அப்புறம் கால்பண்றன்னு சொல்லி அனுப்புவதை எல்லாம் நம்ப மாட்டாங்க, பப்பு பார்ட்டின்னு கூப்பிடுறதை தான் ஏஜெண்ட்டுகள் வைத்திருக்கிறார்கள். சில வாய்ப்ப்பு தரேன்னு சொல்லிட்டு காலை வாரிவிட்டு இருக்காங்க.
ஒரு பெரிய இயக்குநர்கள், அடுத்து ஒரு படம் பண்றேன், உங்களுக்கு நல்ல ஜான்ஸ் வரும்னு சொல்லிட்டு, பிரபோஸ் பண்ணுவது போல் வருவாங்க, என் கூட டிராவல் பண்ணுங்கன்னு சொல்லுவாங்க. அவங்களுக்கு ஒரு ரிவெஞ்ச் பண்ணிவிட்டால் போதும். இதெல்லாம் 60 பிளஸ் டைரக்டர்கள் தான் செய்றாங்க, அவங்க கிட்டதான் எல்லாம் உஷாரா இருக்கணும், புதுமுக இயக்குநர்கள் இதையெல்லாம் பண்ணவில்லை.