பண்றதை எல்லாம் பண்ணிட்டு கழட்டி விட்ட காதலன்..புலம்பும் நடிகை

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 03, 2024 02:30 PM GMT
Report

சினிமாவில் சரியான பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வந்த நடிகைக்கு ஒரு நடிகர் வாய்ப்பு கொடுத்து பிரபல நடிகையாக மாற்றி இருக்கிறார். மேலும் அந்த நடிகருடன் இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பதால் அவரை துரத்தி துரத்தி காதலித்துள்ளார்.

அந்த நடிகர் கடந்த சில ஆண்டுகளாக அந்த நடிகையின் காதல் ஏற்றுக் கொண்டு லிவிங் டுகெதர் வாழ்க்கையை நடத்தி உள்ளார். ஆனால் அவர் அந்த நடிகையுடன் மட்டுமின்றி பல நடிகைகளுடன் இப்படி தனிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வந்து இருக்கிறார்.

இந்த விஷயம் அந்த நடிகைக்கு தெரிய பெரிய சண்டை இருவருக்கும் இடையே வெடித்துள்ளது. இதுக்கு முன்னாடி எப்படி இருந்தியோ அது எனக்கு கவலையில்லை, இனி அந்த மாதிரி இருக்காத. நீ என்னவனாக இருக்க வேண்டும் என நடிகை அடம்பிடித்து கல்யாண டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். இதனால் கடுப்பான அந்த நடிகர், நடிகையுடன் பிரேக் அப் செய்துவிட்டாராம்.

தற்போது அந்த நடிகை புலம்பி வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.