விஜய் தேவரகொண்டாவுடன் நடித்தபோது அசவுகரியமாக உணர்ந்த நடிகை.. தந்தை உடைத்த ரகசியம்
லைகர்
பூரி ஜகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வெளிவந்த திரைப்படம் லைகர்.
பாக்ஸிங்கை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களை பெற்று வசூலில் தோல்வி அடைந்தது. லைகர் இந்தியளவில் ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு பிரம்மாண்டமாக வெளியானது.
இந்நிலையில், இப்படத்தில் நடித்தபோது நடிகை அனன்யா பாண்டே அசவுகரியமாக உணர்ந்ததாக அவரது தந்தை கூறிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரகசியம்
அதில், " லைகர் படத்தில் நடிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் அனன்யா இருந்தார். ஆனால், அந்த நேரத்தில் நான் தான் அவரை இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்தேன்.
படத்தில் நடிக்கும்போது அனன்யா அசவுகரியமாக உணர்ந்துள்ளார் இருப்பினும் என் பேச்சை கேட்டு அவர் நடித்தார். லைகர் படத்தின் தோல்விக்கு பின் சினிமாத்துறை சம்பந்தமாக அனன்யாவுக்கு நான் ஆலோசனைகள் வழங்குவதை நிறுத்திவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.