அந்த ஒரே ஒரு வார்த்தை.. பூஜா ஹெக்டேவை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்
பூஜா ஹெக்டே
தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால், இப்படம் சரியாக போகாத காரணத்தினால் தமிழில் இருந்து தெலுங்கிற்கு சென்ற பூஜாவிற்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தற்போது தளபதி விஜய்யுடன் ஜனநாயகன், சூர்யாவுடன் ரெட்ரோ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஒரே ஒரு வார்த்தை
இந்நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் பூஜா ஹெக்டே சொன்ன ஒரு வார்த்தையால் நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதாவது, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான "அலா வைகுந்தபுரம்லோ தமிழ் படம்" என பேட்டியில் தவறுதலாக பூஜா ஹெக்டே கூறிவிட்டார்.
அவர் நடித்தது தமிழா, தெலுங்கா என்று கூட தெரியவில்லையே என தெலுங்கு ரசிகர்கள் அவரை ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர். அந்த படத்தின் புட்ட பொம்மா பாடலில் பூஜா ஹெக்டே ஆடிய டான்ஸ் பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
"Ala Vaikunthapurramuloo is a Tamil film" - Pooja Hegde pic.twitter.com/BkXpLpBkOY
— Manobala Vijayabalan (@ManobalaV) February 4, 2025