விஜய்காந்த், கமலை மட்டம் தட்டி ஒதுக்கி அவமானப்படுத்திய பிரபல நடிகை!! அம்பலப்படுத்திய பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கேப்டன் என்ற பெயரை எடுத்து புகழப்பட்டு வருபவர் நடிகர் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வருகிறார். அவரின் சமீபத்தில் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உருக வைத்தது.
பல வெற்றிப்படங்களை கொடுத்து கட்சியை சிறப்பாக வழிநடத்தியும் வந்த விஜயகாந்த்-ஐ நினைத்து பலர் வருத்தப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் மூத்த நடிகர்கள் பற்றி சில விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்களுடன் நடிக்க அந்தக்காலக்கட்டத்தில் நடிகைகள் போட்டிப்போடுவார்கள். ஆனால் ஒருசில நடிகைகள் குறிப்பிட்ட நடிகர்களுடன் நடிக்கமாட்டேன் என்ற வைராக்யத்தில் இருந்தும் வந்துள்ளனர்.

அப்படியான மனநிலையில் இன்றுவரை தக்கவைத்து வருபவர் நடிகை நதியா. பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்த நடிகை நதியா, ஒரு படத்தில் கட்டாயத்தின் பெயரி விஜயகாந்துடன் நடித்துள்ளாராம். கருப்பாக இருக்கும் விஜயகாந்துடன் என்னால் நடிக்க முடியாது என்று அவமானப்படுத்தியிருக்கிறார்.
நடிகர்களுடன் நெருக்கமாகவும் ஒட்டி உரசியும் நடிக்கமாட்டேன் என்ற குறிக்கோளில் இருந்த நதியா, விஜயகாந்த் கருப்பாக இருக்கிறார் என்று கூறியும் கமல் ஹாசன் நெருக்கமாக நடிக்க வேண்டும் என்ற காரணத்தை காட்டியும் இருவரிடமும் நடிக்கமுடியாது என்று கூறியிருக்கிறார்.

ஆனால் கருப்பாக இருக்கும் ரஜினிகாந்துக்கு மட்டும் ஏன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் என்ற கேள்வி பலரின் கேள்வியாகவும் இருந்து வந்துள்ளது.