மார்ஃபிங் காட்சிக்கு வீட்ல இதைத்தான் சொன்னாங்க!! உண்மையை கூறிய லவ் டுடே இவனா
மலையாள சினிமாவில் மாஸ்டர்ஸ் என்ற படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்து தமிழில் நாச்சியார் படத்தில் கதாநாயகியாக நடித்து நடிகையானவர் நடிகை இவனா. இப்படத்தினை அடுத்து ஹீரோ படத்தில் முக்கிய ரோலில் நடித்த இவனா இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்ததோடு 60 கோடிக்கும் மேல் தமிழ், தெலுங்கு மொழிகளில் வசூலித்துள்ளது. இப்படத்தில் இவனாவின் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கிளைமேக்ஸில் மார்ஃபிங் காட்சி அமைந்திருப்பதை குடும்பத்தினர் என்ன கூறினார்கள் என்று கூறியுள்ளார்.
அப்படி பெற்றோர்களிடம் கூறியதற்கு, கிளைமேக்ஸ்க்கு தேவை என்றால் இதற்கு ஒப்புக்கொள் என்று சாதகமாக கூறியதால் தான் நான் நடித்தேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நம் வாழ்விலும் இப்படியான பிரச்சனை ஏற்படுவதால் மன உளைச்சலில் இல்லாமல் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்.
முகத்தை மறைக்க நாம் ஒன்றும் குற்றம் செய்யவில்லை என்று முகத்தை மறைக்கக்கூடாது. குற்றம் செய்யவில்லை என்று குரல் கொடுத்தால் தான் குற்றமற்றவர் என நிரூபிக்க முடியும் என்ற தெரிவித்துள்ளார்.