வித்தியாசமான சேலையில் நடிகை ஜான்வி கபூர்!! புகைப்படங்கள்..
ஜான்வி கபூர்
பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இளம் ஹீரோயினாக வலம் வருகிறார் ஜான்வி கபூர். தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர் Dhadak எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த ஜான்வி, கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்த தேவரா திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். வரும் ஆகஸ் 29 ஆம் தேதி நடிகர் சித்தார் மல்கோத்ராவுடன் நடித்த Param Sundari படம் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் பாடல் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புகைப்படங்கள்
படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் ஜான்வி, வித்தியாசமான ஜல்லாடை போன்ற சேலையணிந்து வந்துள்ளார். அந்த சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்கள் மற்றும் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.





