படுத்தால் 40.. நடித்தால் 10!! அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி ஓப்பனாக பேசிய கார்த்தி பட நடிகை ஜீவிதா..
கார்த்தி நடிப்பில் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் கார்த்தியின் அக்கா கதாபாத்திரத்தில் நடிகை ஜீவிதா நடித்திருப்பார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஜீவிதா, சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசி இருக்கிறார். இயக்குனர் ஒருவர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று என்னை அழைத்தார்.
அந்த சமயத்தில் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள். மேலும், ஒரு படத்தில் நடிக்க ஆரம்பத்தில் கூறினார்கள். அப்போது நானும் சரி என்று சொல்லி சென்ற போது என்னிடம் 40 ஆயிரம் சம்பளம் என்று கூறினார்கள்.
ஆனால் அதற்கு நீ படுக்கையை பகிர வேண்டும் என்றார்கள். அதெல்லாம் முடியாது என்று சொன்னதால் 10 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் என்று தெரிவித்தார்கள்.
அட்ஜெஸ்ட் செய்து வரும் 40 ஆயிரம் சம்பளம் வேண்டாம் 10 ஆயிரமே போதும் என்று கூறியதாக ஜீவிதா ஓப்பனாக தெரிவித்துள்ளார்.
You May Like This Video