என்ன பெரிய த்ரிஷா, சினேகா.. ரெட்ரோ படத்தில் இணைந்த ரசிகர்களின் கனவுக்கன்னி
சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கங்குவா. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து சூர்யா, கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படம் மே 1ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் என பலர் நடித்துள்ளனர்.
அட இவரா!
சமீபத்தில் வெளியான GOAT படத்தில் நடிகை சினேகா பல வருடங்களுக்கு பின் விஜய் ஜோடியாக நடித்திருப்பார். அது போன்று நடிகை த்ரிஷாவும் அந்த படத்தில் மட்ட பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தற்போது அந்த வரிசையில் நடிகை சூர்யாவின் ரெட்ரோ படத்தில் ஸ்ரேயா இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, இந்த செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.