தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம்.. ஜோதிகாவின் பேச்சால் பரபரப்பு
நடிகை ஜோதிகா இந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர். இவர் தற்போது பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் படங்கள் நடித்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம் என ஜோதிகா பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தென்னிந்திய சினிமா ஒரு ஆணாதிக்க சினிமா உலகமாக இருக்கிறது. பாலிவுட் சினிமாவோடு ஒப்பிடும்போது தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம். அங்கு பெரும்பான்மையாக எழுதப்ப்டும் கதைகளும் ஆண்களின் கதாபாத்திரங்களை மையமாக வைத்துதான் எழுதப்படுகிறது".
"பெண் கதாபாத்திரங்கள் வெறுமென ஹீரோவிற்கு ஜோடியாக மட்டுமே எழுதப்படுகிறது. ஹீரோவுடன் நடனம் ஆடுவதற்கும், கிறுக்குத்தனமாக எதாவது செய்வதுமாக மட்டுமே இருக்கும். இப்போது அவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நானுமே ஒரு காலத்தில் அப்படி படித்துக்கொண்டிருந்தேன். ஆனால், இதனை புரிந்துகொண்டு, அதிலிருந்து என்னை மாற்றி நடித்துக்கொண்டு வருகிறேன்".
"எனக்கு இந்த புரிதல் வந்தபின், நான் தேர்வு செய்யும் படங்களும் கதைகளுமே என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. எனது 28வது வயதில் இருந்தே எனக்கு புரிதல் இருந்ததால், அதன்பின் வெகு சில கதைகளில் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டேன்" என பேசியுள்ளார்.
இவருடைய இந்த பேச்சு தமிழ் சினிமா வட்டாரம் மட்டுமின்றி தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோதிகா மேடம் அது என்ன சவுத் இந்தியன் படங்களில் அப்படினு குறிப்பிட்டு சொல்றது... இதுலாம் வன்மம் மாதிரி தெரியுது..
— H.A.L. 9000 (@tamilhollywood2) March 7, 2025
நார்த் இந்தியன் படங்களில் ஹீரோயினை அதே மாதிரி தான யூஸ் பண்றாங்க 🤭 pic.twitter.com/y9GxSIVwVy