தலைநகரம் பட புகழ் நடிகையா இது... சால்ட் அன் பெப்பர் லுக்கில் ஆளே மாறிவிட்டாரே

Tamil Cinema
By Yathrika Mar 05, 2024 07:42 AM GMT
Report

ஜோதிர்மயி

ஜெயம் ரவி நடித்த இதயத்திருடன், சுந்தர் சி நடித்த தலைநகரம், விஜயகாந்த் நடித்த சபரி, ஜீவன் நடித்த நான் அவன் இல்லை உள்பட சில படங்களில் நடித்தவர் ஜோதிர்மயி.

மலையாளத்தில் பிரபலமான நடிகையான இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2015ம் ஆண்டு அமல் நீரத் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் நடிக்காத ஜோதிர்மயி லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

காரணம் சால்ட் அன் பெப்பர் லுக்கில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். 

இதோ பாருங்கள், 

தலைநகரம் பட புகழ் நடிகையா இது... சால்ட் அன் பெப்பர் லுக்கில் ஆளே மாறிவிட்டாரே | Actress Jyothirmayi Latest Photo Shocks Fans