புதிய தொழில் தொடங்கிய நடிகை கங்கனா ரனாவத்.. இது வேறயா?
Tamil Cinema
Indian Actress
Kangana Ranaut
By Bhavya
கங்கனா ரனாவத்
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். இவர் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். அது மட்டுமின்றி நான்கு தேசிய திரைப்பட விருதுகள், ஐந்து பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர் கங்கனா.
இவர் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து அதன்முலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்.
தற்போது கங்கனா இமய மலைப்பகுதியில் ஒரு ஹோட்டல் திறந்துள்ளார், அதில் பாரம்பரிய உணவு வகைகள் நவீன முறையில் வழங்கப்படும்.
இமயமலையின் அழகை ரசித்தபடி உணவு உண்ணும் வகையில் இந்த ஓட்டலை அவர் கட்டி இருக்கிறார். இந்த உணவகத்தை வரும் பிப்ரவரி 14ம் தேதி அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க இருப்பதாகவும் அவர் தனது இன்ஸ்டா தளம் மூலம் அறிவித்துள்ளார்.