நடிகை கீர்த்தி சுரேஷின் காதலர் ஆண்டனி என்ன செய்கிறார் பாருங்க.. வெயிட் பார்ட்டிதான் போல
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தளபதி விஜய், தனுஷ், சூர்யா, மகேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னணி நடச்த்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மலையாளம் என கலக்கிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ், தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.
அட்லீ தயாரிப்பில், இயக்குனர் கலீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள, பேபி ஜான் படத்தில் கதாநாயகியாக நடித்து, இந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தின் பாடல் கூட சமீபத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்றுள்ளது.கடந்த வாரம் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து பல தகவல்கள் வெளிவந்தது.
கீர்த்தி சுரேஷ் தன்னுடைய 15 வருட காதலரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்யப்போகிறார் என கூறப்பட்டது. அதை உறுதி படுத்தும் விதமாக 15 ஆண்டுகள் ஆண்டனி என்பவரை காதலித்து வருவதாக புகைப்படத்துடன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
என்ன செய்கிறார் தெரியுமா
இந்நிலையில், கீர்த்தியின் காதலர் ஆண்டனி யார், என்ன செய்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஆண்டனி துபாயில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கிறார்.
அவரது குடும்பத்தினர் பாஜகவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவருக்கு கொச்சியில் ஏகப்பட்ட ரெஸ்டாரண்ட்டுகள் இருப்பதாகவும், பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் அவருக்கு சொத்து குவிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.