40 வயதாகியும் குடிக்கு அடிமையாகிய விக்ரம் பட நடிகை!! கையில் மதுபாட்டிலுடன் வெளியிட்ட புகைப்படம்..
தமிழ் சினிமாவில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் வட இந்திய நடிகை கிரண் ரத்தோட். அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பால், அஜித்தின் வில்லன், பிரசாந்தின் வின்னர், கமல் ஹாசனின் அன்பே சிவம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானார்.
அதன்பின் ஒருசில படங்களில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த கிரண் சில காலம் ஆள் அடையாளம் தெரியாமல் போனார். வாய்ப்பில்லாமல் உடல் எடையை அதிகரித்ததால் தான் சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்துள்ளார்.
அதன்பின் உடல் எடையை குறைத்து குணச்சித்திர ரோலில் நடித்து வந்தார். இப்படியொரு நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை வாய்ப்பிற்காக பதிவிட்டு வந்தார்.
அப்படி வாய்ப்பில்லாமல் இருந்த கிரண், தனியாக இணையதளத்தில் ஆப் ஒன்றினை ஆரம்பித்து வீடியோ மற்றும் ஆடியோ கால் பேசியும் புகைப்படத்தை ரேட் கார்ட் போட்டு காசு சம்பாதித்து வருகிறார். தற்போது மது அருந்தி போதையில் எடுத்த அலங்கோலமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.