30 வருடம், உங்களை போன்ற ஒரு துணை.. கணவர் குறித்து குஷ்பூ உடைத்த அந்த விஷயம்

Sundar C Tamil Cinema Kushboo
By Bhavya May 20, 2025 10:30 AM GMT
Report

குஷ்பூ

80ஸ் 90ஸ்-களில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் குஷ்பூ. நாயகி என்பதை தாண்டி இப்போது அரசியல் வாதியாகவும் தனது ஈடுபாட்டை காட்டி வருகிறார்.

படங்கள் தயாரிக்கும் வேலைகளிலும் பிஸியாக இருக்கும் குஷ்பு சமீபத்தில் ஒரு புதிய சீரியலிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

30 வருடம், உங்களை போன்ற ஒரு துணை.. கணவர் குறித்து குஷ்பூ உடைத்த அந்த விஷயம் | Actress Kushboo Post About Her Husband Goes Viral

அந்த விஷயம் 

இந்நிலையில், தனது கணவர் சுந்தர். சி இயக்குநராக அறிமுகமாகி 30 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், குஷ்பூ அவரது கணவர் குறித்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், " என் அன்பே. 30 வருடங்களாக சினிமாவில் உங்களது அசைக்க முடியாத ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பை கொண்டாடுகிறேன். உங்களை முதலில் சந்தித்த தருணத்திலிருந்தே உங்களிடம் ஒரு தீப்பொறி இருப்பதை உணர்ந்துகொண்டேன்.

30 வருட சினிமா வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறீர்கள். என் வாழ்க்கையில் உங்களை துணையாக பெற்றதை எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை, அந்த அளவிற்கு மகிழ்ச்சியாக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.  

30 வருடம், உங்களை போன்ற ஒரு துணை.. கணவர் குறித்து குஷ்பூ உடைத்த அந்த விஷயம் | Actress Kushboo Post About Her Husband Goes Viral