உடல் எடை குறைத்தது இப்படி தான்.. பொத்தி வைத்த ரகசியத்தை உடைத்த குஷ்பு

Tamil Cinema Kushboo Actress
By Bhavya May 18, 2025 05:30 AM GMT
Report

 குஷ்பு

நடிகை குஷ்பு, 80களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர்களில் ஒருவர். நாயகி என்பதை தாண்டி இப்போது அரசியல் வாதியாகவும் தனது ஈடுபாட்டை காட்டி வருகிறார்.

படங்கள் தயாரிக்கும் வேலைகளிலும் பிஸியாக இருக்கும் குஷ்பு சமீபத்தில் ஒரு புதிய சீரியலிலும் நடிக்க துவங்கியுள்ளார். சில ஆண்டுகளாக உடல் எடை குறைப்பதில் ஈடுபட்டு வந்தார். தற்போது, அதில் வெற்றியும் அடைந்துள்ளார்.

உடல் எடை குறைத்தது இப்படி தான்.. பொத்தி வைத்த ரகசியத்தை உடைத்த குஷ்பு | Actress Kushboo Weight Loss Secret

ரகசியம் 

இந்நிலையில், உடை எடை குறைத்தது எப்படி என்பது குறித்து பகிர்ந்துள்ளார். அதில், " இந்த பயணம் அற்புதமாக இருந்தது. சில நேரங்களில் சோதனையாகவும், சோர்வாகவும் இருந்தது.

ஆனால் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், பொறுமை மற்றும் விடாமுயற்சி மனப்பான்மையை கைவிடாதீர்கள். ஒரு குறிக்கோளுடன் நடந்து செல்லுங்கள்.

உங்கள் இலக்கை நோக்கி கவனம் செலுத்துங்கள். வெற்றி கண்டிப்பாக உங்களை தேடி வரும்.

இதனால் நான் மற்றவர்களுக்கு சொல்லும் விஷயம் என்னவென்றால் கடினமாக உழைக்க சொல்வது மட்டுமே" என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.  

உடல் எடை குறைத்தது இப்படி தான்.. பொத்தி வைத்த ரகசியத்தை உடைத்த குஷ்பு | Actress Kushboo Weight Loss Secret