கன்னக் குழியழகி நடிகை லைலா மகன்களா இது.. அடையாளமே தெரியவில்லை

Laila Viral Photos Actress
By Bhavya Jul 19, 2025 12:30 PM GMT
Report

லைலா

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நாயகிகளில் ஒருவர் லைலா. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் ரிப்போட்டர் வேடத்தில் துணை நடிகையாக அறிமுகம் ஆனார்.

அப்படத்தை தொடர்ந்து ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அஜித்துடன் தீனா, விக்ரமுடன் தில், சூர்யாவுக்கு ஜோடியாக நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து, மவுனம் பேசியதே என 4 ஹிட் படங்களில் நடித்தார்.

கன்னக் குழியழகி நடிகை லைலா மகன்களா இது.. அடையாளமே தெரியவில்லை | Actress Laila Son Latest Photos

இப்படி பிஸியாக நடித்துக் கொண்டே இருந்த லைலா 2006ம் ஆண்டு ஈரானை சேர்ந்த தனது நீண்டநாள் காதலரான மெஹ்தின் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

கன்னக் குழியழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் அதன் பின், திருமணம் குழந்தைகள் என கேமரா பக்கம் வராமல் இருந்தார்.

 மகன்களா இது?

இந்நிலையில், தற்போது லைலா சமீபத்தில் தனது மொத்த குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர அது செம வைரலாகி வருகிறது. இதோ,     

கன்னக் குழியழகி நடிகை லைலா மகன்களா இது.. அடையாளமே தெரியவில்லை | Actress Laila Son Latest Photos