27 வயதில் திருமணம் செய்ய போகும் நடிகை லட்சுமி மேனன்.. மாப்பிள்ளை இந்த நடிகரா..
Vishal
Lakshmi Menon
Gossip Today
Actress
By Edward
மலையாள நடிகையாக 15 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை லட்சுமி மேன். கும்கி படத்தில் மூலம் தமிழில் அறிமுகமான லட்சுமி மேனன் நடித்த முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கண்டார்.
அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்தார். இடையில் படிப்பை தொடர்ந்த லட்சுமி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால் வாய்ப்பு சரியாக அமையாததால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது சிப்பாய் படத்திலும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் 27 வயதாகும் லட்சுமி மேனன் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மாப்பிள்ளை பிரபல நடிகர் என்றும் அது அவருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் விஷால் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.