அஜித் மீது எனக்கு Crush.. ஆனால்! ஓபனாக பேசிய 48 வயது நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வருகிறார் அஜித். காதல் மன்னன், அல்டிமேட் ஸ்டார், தல என பல பட்டங்கள் இருந்தாலும், தன்னை அஜித் அல்லது AK என அழைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த ஆண்டு குட் பேட் அக்லி எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்துள்ள அஜித், மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து படம் பண்ணபோகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்துடன் நேசம் மற்றும் உல்லாசம் என இரு படங்களில் நடித்தவர் நடிகை மகேஸ்வரி. இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கை ஆவார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் மீது தனக்கு Crush இருந்தது என ஓபனாக கூறியுள்ளார்.
இதில், அஜித் மேல் எனக்கு Crush இருந்தது. அவருடன் இரண்டு படங்கள் நடித்திருக்கிறேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என அவர் கூறியுள்ளார். படப்பிடிப்பின் கடைசி நாளில் அஜித்தை பார்க்க முடியாமல் வருத்தத்துடன் நடிகை மகேஸ்வரி இருந்த நிலையில், அஜித்தே அவரிடம் வந்த பேசியுள்ளார். அப்போது நீ எனக்கு தங்கை போல் என அஜித் கூறியதாக நடிகை மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.