23 வயதாகும் மமிதா பைஜூவிற்கு திருமணமா? கல்யாண கோலத்தில் வெளியிட்ட புகைப்படம்..
மமிதா பைஜூ
தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நாயகியாக மாறியுள்ளார் மமிதா பைஜூ. இவர் இந்த ஆண்டு வெளிவந்த ப்ரேமலு படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.
தற்போது தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் மமிதா பைஜூவிற்கு தமிழ் சினிமாவிலும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே ஜி.வி. பிரகாஷின் ரெபல் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது விஷ்ணு விஷாலுடன் நடித்து வருகிறாராம். இதுமட்டுமின்றி தளபதி விஜய்யின் கடைசி படத்திலும் மமிதா கமிட்டாகியுள்ளார் என சொல்லப்படுகிறது.
திருமணமா?
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் மமிதா பைஜூ. இந்த நிலையில், நடிகை மமிதா பைஜூ திருமண கோலத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், என்னது? இவருக்கு திருமணமா என கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், அது வெறும் போட்டோஷூட் புகைப்படங்கள் மட்டுமே நேபாது குறிப்பிடத்தக்கது.



