கணவருடன் விவாகரத்து!! நயன்தாரா பட நடிகரால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை.. கழுவி ஊற்றும் ரசிகர்கள்..
பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வரும் அனுராக் காஷ்யாப் இந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். தமிழில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் ரோலில் நடித்து மிரட்டி இருப்பார்.
சமீபத்தில் கூட நடிகர் விஜய்யின் லியோ படத்தில் அவரது நண்பராக நடித்தார் அனுராக். இந்நிலையில், பாலிவுட் நடிகையும் மாடல் அழகியுமான மந்தனா கரிமி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு ஷாக்கான தகவலை கூறி பாலிவுட்டையே அதிர வைத்தார்.
2017ல் கெளரவ புத்தா என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும் சில மாதங்களில் அவரை விவாகரத்து செய்தேன் என்றும் பிரபல நடிகர் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பினால் அவருடன் படுக்கையை பகிர்ந்து கர்ப்பமாயினேன் என்றும் கூறியிருக்கிறார்.
விவாகரத்து வழக்கு இன்னும் முடியவில்லை அதற்குள் கர்ப்பம் ஆகிவிட்டாய் என்று அந்த நடிகர் என்னை துரத்திவிட்டதாக வேதனையை பகிர்ந்திருந்தார். அந்த நடிகர் அனுராக் காஷ்யாப் தான் என்று கூறி பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.