நடிகை மேகா ஆகாஷின் வருங்கால கணவர் யார் தெரியுமா.. இதோ
மேகா ஆகாஷ்
தெலுங்கு திரையுலகம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகை மேகா ஆகாஷ். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் இவருக்கு அறிமுகம் கொடுத்தது.
இதன்பின் சிம்புவிற்கு ஜோடியாக வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தனுஷுடன் எனை நோக்கி பாயும் தோட்டா, விஜய் சேதுபதியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர், சந்தானத்துடன் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களில் நடித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் விஜய் ஆன்டனியுடன் இவர் இணைந்து நடித்திருந்த மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் வெளிவந்திருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை மேகா ஆகாஷிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். ஆனால், இவர் யார் என்று பலருக்கும் தெரியவில்லை.
இந்த நிலையில், மேகா ஆகாஷின் வருங்கால கணவரின் பெயர் சாய் விஷ்ணு. இவர் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசரின் இளைய மகன் என தெரியவந்துள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி இவர்களுடைய திருமணம் நடக்கப்போகிறது என கூறப்படுகிறது.