அரசியல்வாதி வீட்டு மருமகள்!! இத்தாலி ஹனிமூனில் கணவருடன் ரொமான்ஸ் மூடில் மேகா ஆகாஷ்..
Megha Akash
Tamil Actress
Actress
By Jai
மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு
தமிழ் திரையுலகில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இதன்பின் எனை நோக்கி பாயும் தோட்டா, வந்தா ராஜாவாதான் வருவேன், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை மேகா ஆகாஷ் கடந்த மாதம் காதலர் சாய் விஷ்ணு என்பவரை கரம்பிடித்தார். சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.
மேகா ஆகாஷை திருமணம் செய்துகொண்டுள்ள சாய் விஷ்ணு என்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி ஹனிமூன்
கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது இத்தாலி நாட்டிற்கு மேகா ஆகாஷ் ஹனிமூன் சென்றுள்ளார். கடந்த ஒரு மாதமாக கணவருடன் ஹனிமூன் கொண்டாடி அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மேகா ஆகாஷ்.