கணவர் இழப்பை தொடர்ந்து நடிகை மேக்னாராஜிற்கு அடுத்த சோகம்.. வெளியிட்ட புகைப்படம்

meghana raj chiranjeevi sarja petdog
By Edward May 22, 2021 09:30 AM GMT
Report

தெலுங்கு, கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பின் காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தின் மூலம் நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை மேக்னா ராஜ். இதையடுத்து, மலையாள படங்களிலும் தமிழில் ஒருசில படங்களிலும் நடித்து வந்தார்.

2018ல் 10 ஆண்டுகளாக பழகி வந்த கன்னட நடிகை சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இரு ஆண்டுகள் நிலைத்த வாழ்க்கை மேக்னா ராஜ் கருவுற்றிருந்த சமயத்தில் 2020 சிரஞ்சீவி திடீரென உயிரிழந்தார்.

கொரோனா லாக்டவுன் சமயத்தில் மரணமடைந்த சிரஞ்சீவி எண்ணி மனைவி மேக்னா ராஜ் மனமுடைந்தார். இதையடுத்து, அக்டோபர் மாதம் மேக்னாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அதிலிருந்து மீண்டும் வந்த மேக்னா குழந்தையை நன்றாக கவனித்து வருகிறார்.

இந்நிலையில், மேக்னா ராஜ் பாசமாக வளர்ந்து வந்த நாய் மரணமடைந்துள்ளது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாய் இறந்த சோகத்தினை நெகிழ்ச்சியுடம் பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.