அது மட்டும் நடக்கல நான் தற்கொலை செய்திருப்பேன்.... மும்தாஜ்
Mumtaj
By Yathrika
நடிகை மும்தாஜ்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் மும்தாஜ். கட்டிப்பிடி கட்டிப்பிடி டா, ஹலோ ஹலோ ஹலோ பாடல், மலமல மல்லே மல என இப்படி அவரின் ஹிட் பாடல்கள் நிறைய கூறிக்கொண்டே போகலாம்.
கவர்ச்சி நாயகியாக வலம் வந்தாலும் இவருக்கு சினிமா அவ்வளவாக கைகொடுக்கவில்லை.
அண்மையில் ஒரு பேட்டியில் மும்தாஜ் பேசும்போது, எனக்கு Auto Immune நோய் பிரச்சனை இருந்தது, தீராத வலி, அவ்வளவு மாத்திரைகளை தான் சாப்பிடுவேன், எதனால் வலி என்பதே தெரியாமல் நிறைய நாள் வலியை அனுபவித்துள்ளேன்.
அதோடு மன அழுத்தத்தாலும் நான் நிறைய பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அந்த நேரத்தில் என்னை காப்பாற்றியது எனது அண்ணன் குடும்பம் மற்றும் அல்லா தான். இல்லையென்றால் நான் தற்கொலை செய்துகொண்டு இறந்திருப்பேன் என பேட்டி அளித்துள்ளார்.