ECR பங்களா, லிவிங் ரிலேஷன்ஷிப்!! 4 பேரால் நடிகை நக்மா திருமணத்திற்கு போட்ட எண்ட் கார்ட்..
90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்த நடிகை நக்மா தற்போது மும்பையில் செட்டிலானதோடு, அரசியலில் ஈடுபட்டும் வருகிறார். 49 வயதாகும் நடிகை நக்மா இன்று வரை திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாக சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். அதற்கு காரணம் 4 பிரபலங்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியது தானாம்.
நடிகை நக்மாவின் ஆரம்பகாலக்கட்டத்தில் தமிழில் நடித்த போது நடிகர் சரத்குமாருடன் நடித்திருந்தார். அப்போதைய பத்திரிக்கையில் இருவரும் ஜோடியாக நடித்து நெருக்கமாக இருப்பதை பரபரப்பு செய்தியாக வெளியிட்டனர். அதுமட்டுமில்லாமல் ECR பகுதியில் ஆடம்பர பங்களாவில் இருவரும் சேர்ந்து வசித்ததாகவும் ஆணித்தரமாக கூறினார்கள். இதனால் மன வருத்தப்பட்டு நக்மா சரத்குமாரை பிரிந்துவிட்டார்.
பின் நடிகர் கங்குலியுடன் காதலில் இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் அந்த காதலும் சர்ச்சையானதால் பாதியில் பிரேக்காப்பில் முடிந்திருக்கிறது.
பின் நடிகர் பிரபுதேவாவுடன் நடித்த போது இருவரும் ஜோடியாக மிகவும் நெருக்கமாக முத்தக்காட்சியில் கூட நடித்து வந்தனர். இதுவும் கிசுகிசுக்கப்பட்டு பெரியளவில் பேசப்பட்டது.
மேட்டுக்குடி பிஸ்தா படத்தில் நடிகர் கார்த்திக்குடன் நடித்தார் நக்மா. இவர் தான் வேண்டும் என்று கார்த்திக் நக்மாவிற்காக அடம்பிடித்திருக்கிறார். அப்படியொரு நட்பு இருவருக்கும் இருந்துள்ளது. இப்படி 4 பிரபலங்களோடு நடந்த கிசுகிசு செய்திகள் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. பலரின் ஏமாற்றத்தாலும் நடிகை நக்மா திருமணத்தை இத்தனை வயதாகியும் ஒதுக்கி வருகிறாராம்