நயன்தாராவின் ஃபேவரெட் சீரியல் இதுதானாம்!! ஒரு எபிசோட்டையும் விடமாட்டாங்களாமே..

Nayanthara Serials Tamil TV Serials Tamil Actress
By Edward Oct 30, 2024 03:45 PM GMT
Report

நயன்தாரா

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்தியளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, Hi, டியர் ஸ்டுடென்ட்ஸ், டாக்சிக் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மேலும் பாலிவுட் சினிமாவிலும் பட வாய்ப்புகள் வருவதாக தகவல் கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் நயன்தாரா.

ஃபேவரெட் சீரியல்

சமீபத்தில் தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நடிகை நயன் தாராவுக்கு பிடித்த சீரியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் கயல் சீரியல்தான் நயனுக்கு ரொம்பவே பிடித்த சீரியலாம். ஒரு எபிசோட் கூட விடாமல் பார்க்கும் அவர் அந்த சீரியலில் நடிக்கும் சைத்ரா ரெட்டி - சஞ்சீவ் நடிப்பையும் வெகுவாக ரசிப்பாராம்.