ரஜினிகாந்த் ஓகே சொல்லியும் நிறைவேறாமல் போன நடிகையின் ஆசை!! நடிகை நிரோஷா கூறிய ரகசியம்..

Rajinikanth Nirosha Aishwarya Rajinikanth Gossip Today
By Edward Feb 06, 2024 08:30 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, தனுஷை பிரிந்தப்பின் இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அப்படி லால் சலாம் என்ற படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்கி இருக்கிறார். தன்னுடைய அப்பா ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணா, செந்தில், நிரோஷா போன்ற பல நட்சத்திரங்கள் நடிப்பில் லால் சலாம் படம் வரும் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ரஜினிகாந்த் ஓகே சொல்லியும் நிறைவேறாமல் போன நடிகையின் ஆசை!! நடிகை நிரோஷா கூறிய ரகசியம்.. | Actress Nirosha Exciting Act Pair With Super Star

இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நடிகை நிரோஷா, ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தது குறித்து சில விசயங்களை எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.

ரஜினி சாருடன் ஏற்கனவே வந்த ஒரு வாய்ப்பு சார் நடிக்க ஓகே என்று கூறி பின் தவறி போனதாகவும் நான் தெலுங்கு படத்தில் நடித்த படம் தான் அது. ஆனால் சில காரணங்களால் நடக்காமல் போய்விட்டது. அவர் பல ஆண்டுகளாக நான் சினிமாவில் நடித்து வருகிறேன். ஆனால், ரஜினி சாருடன் என்னால் நடிக்க முடியாமல் சினிமா பயணம் முழுமையடையாமல் இருந்தது.

லால் சலாம் படத்தில் நடித்ததன் மூலம் என் நடிப்பு வாழ்க்கை முழுமை அடைந்துவிட்டதாக உணர்கிறேன். அவருடன் நடிக்க மாட்டோமா என்ற ஏக்கம் இருந்த நிலையுல் தற்போது அவருக்கு ஜோடியாக லால் சலாம் படத்தில் நடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை எனக்கு அளிக்கிறது.

வாய்ப்பு கொடுத்த ஐஸ்வர்யாவுக்கு நன்றி. சூப்பர் ஸ்டார் மகள் என்பது போல் இல்லாமல் இயல்பாக, எளிமையாக ஷூட்டிங்கில் பணியாற்றுவார். பெண் இயக்குனருடன் ஆசைப்பட்டேன், அது நடந்துவிட்டதாக நிரோஷா மேடையில் தெரிவித்துள்ளார்.