தனுஷ் இதை செய்யசொன்னார்..நான் கண்டிப்பாக!! நடிகை நித்யா மேனன் சொன்ன ரகசியம்
Dhanush
Nithya Menen
Thiruchitrambalam
Tamil Actress
By Jai
முன்னணி இயக்குநர்களுடன் அடுத்தடுத்து நடித்து வரும் நடிகர் தனுஷ், தற்போது ராயன் படத்திற்கு பின் நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் என்ற படத்தினை இயக்கியுள்ளார்.
விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இட்லி கடை என்ற படத்தினையும் இயக்கி வருகிறார். இப்படத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் அவருடன் நடித்த நடிகை நித்யா மேனனும் இணைந்துள்ளார்.
சமீபத்தில் நித்யா மேனன், அளித்த பேட்டியொன்றில் இந்தப்படத்தில் தன்மீது அதிகமான நம்பிக்கை வைத்துள்ள தனுஷ், தனக்கு சிறப்பான கேரக்டரை கொடுத்திருக்கிறார்.
தன்னுடைய கேரக்டரில் காமெடி தூக்கலாக இருக்கும் என்றும் தன் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்திருப்பதால் சிறப்பாக இந்த கேரக்டரை செய்வேன் என்று தனுஷ் ஊக்குவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.