அஜித்தா வேண்டவே வேண்டாம்-னு ஒதுக்கிய தயாரிப்பாளர்!! பல வருட உண்மையை கூறிய பிரபல நடிகை

Ajith Kumar Gossip Today Tamil Actors Tamil Actress
By Edward Aug 03, 2023 04:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே வெளிநாட்டிற்கு பைக் ரைட் சென்றுவிட்டார். இதனால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றமடைந்து வருகிறார்கள்.

இந்நிலையில் அஜித்துடன் நடித்த சில அனுபவங்களை பற்றி பிரபல மூத்த நடிகை வடிவுக்கரசி பகிர்ந்துள்ளார். வாய்ப்பில்லாத அந்த சமயத்தில் இயக்குனர் அகத்தினர் சார் வான்மதி படத்தின் கதையை கூறி பத்மாவதி ரோலில் நடிக்க வைத்தார். அஜித், நடிகை ஸ்வாதி நடிப்பில் 1996ல் வெளியாகி ஓரளவிற்கு வரவேற்பு பெற்றது. அஜித் நல்ல புள்ள சார், பெரிய ஆர்ட்டிஸ்ட் ஆகிட்டதால, நான் நல்ல புள்ள கிள்ளன்னு வேறுமாதிரி சொல்லிட்டு தப்பாகிடபோது.

அஜித்தா வேண்டவே வேண்டாம்-னு ஒதுக்கிய தயாரிப்பாளர்!! பல வருட உண்மையை கூறிய பிரபல நடிகை | Actress Open Ajith Stuggle Her Dubbing In Tamil

வான்மதி படத்தில் அஜித்தை டப்பிங் பேசக்கூடாதுன்னு தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் சொல்லிட்டாரு. அகத்தியன் சாருக்கே வான்மதி ஒரு ரீஎண்ட்ரி. தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன், அவன் தமிழே சரியா பேசத்தெரியல, கலந்தாமதிரி பேசுறான், டப்பிங் வேண்டான்னு சொல்லிட்டாரு.

நான் சொன்னேன், ரஜினி சார் கூட தான் அப்படி பேசுறாரு, அஜித் சரியா தான் பேசுறார், ரஜினி சாரை மைண்ட்டில் வைத்து ஒரு முறை பேச வைங்கன்னு சொல்லிட்டப்பின் அஜித்தை டப்பிங் பேச வைத்தார். மேலும் நீ வருவாய் என படத்தில் ஷூட்டிங்கில், ஒரு உதவி இயக்குனர் லேட்டா வந்துட்டாரு. உடனே அன்று டிவிஎஸ் ஸ்கூட்டி வாங்கி கொடுத்துவிட்டார் அஜித்.

அவருக்கு ஓட்டத்தெரியாதுன்னு சொன்னதும் அத ஓட்டுறதுக்கு ஒரு ஆள போடுங்கன்னு சொல்லிட்டாரு. அப்படியொரு நல்லவர். ரஜினியை போல் பேசுவாரு என்று கூறியிருக்கிறார். அஜித்திற்கு அப்படியே ஆப்போசிட் விஜய், பேசவே மாட்டாரு. எப்படி டப்பிங்கில் மட்டும் இப்படி பேசுகிறார் என்று ஆச்சரியமா இருக்கும் எனக்கு என்று வடிவுக்கரசி பகிர்ந்திருக்கிறார்.