எனக்கு மட்டும் அது நடக்காம இருந்தா!! தனுஷுடன் திருமணம் செய்ய ஆசைப்பட்ட நடிகை ரேகா நாயர்.. வைரல் வீடியோ
தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வாத்தி திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
தற்போது தனுஷ் இயக்குனர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
சின்னத்திரை வெள்ளித்திரை நடிகையாக இருக்கும் ரேகா நாயர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
அதில் அவர், எனக்கு சினிமாவில் நடிகர் தனுஷ் தான் ரொம்ப பிடிக்கும். இது பற்றி அவரிடமே நான் கூறியிருக்கிறேன்.
எனக்கு திருமணம் மட்டும் ஆகாமல் இருந்திருந்தால் தனுஷை திருமணம் செய்திருப்பேன் என்று கூறியுள்ளார்.
இது குறித்து தற்போது இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு வந்த நிலையில் ஊடகத்தில் பதிவிட்ட செய்திகளுக்காக நடிகை ரேகா நாயர் கோபத்தில் கடுமையாக திட்டி ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார்.