உன்னோட வீடியோவை வெளியிட்டுவிடுவேனு மிரட்டிய ரசிகர்!! நடிகை ஓவியா சொன்ன ஒற்றை வார்த்தை..
நடிகை ஓவியா
மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் காலெடி எடுத்து வைத்து டாப் நடிகையாக மாறியவர் தான் நடிகை ஓவியா. கங்காரு, அபூர்வா, புதிய முகம் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்தார் நடிகை ஓவியா.

நாளை நமதே, களவாணி, மரினா, கலகலப்பு, மூடர் கூடம், மத யானை கூட்டம், புலிவால்ம் யாமிருக்க பயமே, 144 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
இடையில் வாய்ப்பில்லாத ஓவியா, 2017ல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அவர் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் ஓவியா திடீரென நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து பல படங்களில் நடித்த ஓவியா, இணையத்தில் ஒரு வீடியோவில், புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றிக்காண்பதில்லை என்ற பாடலை போட்டுள்ளார். அதற்கு ஒரு ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
அதில் ஒரு ரசிகர், இருடி உன்னோட வீடியோவை சோசியல் மீடியாவில் 8k அப்லோட் பண்றேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு ஓவியா, பண்ணுடா செல்லம் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.