3 கோடி பாலோவர்ஸ் ஆனால் அது முடியாது.. ரெட்ரோ நாயகி பூஜா ஹெக்டே ஓபன் டாக்
Suriya
Pooja Hegde
Actress
By Bhavya
பூஜா ஹெக்டே
கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் அடுத்ததாக ரெட்ரோ படம் தமிழில் வெளிவரவுள்ளது.
இப்படத்திலிருந்து இதுவரை வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரெட்ரோ திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ள நிலையில் பேட்டி ஒன்றில் பூஜா சமூக வலைத்தளம் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஓபன் டாக்
அதில், " எனக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 3 கோடி பாலோவர்ஸ் உள்ளார்கள். அதற்காக என் படத்திற்கு 3 கோடி டிக்கெட் விற்பனையாகும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது.
அதுபோன்று, சில பிரபலங்களுக்கு 50 லட்சம் இன்ஸ்டா பாலோவர்ஸ் இருப்பார்கள். ஆனால், அவர்கள் படங்களுக்கு அதிக கூட்டம் கூடும். எனவே சமூக ஊடகங்கள் உண்மையான உலகம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.