2வது ரவுண்ட்!! இரண்டாம் முறை கர்ப்பமான சூர்யா பட நடிகை பிரணிதா..

Pranitha Subhash Pregnancy Tamil Actress Actress
By Edward Jul 25, 2024 08:30 AM GMT
Report

நடிகை பிரணிதா சுபாஷ், கடந்த 2009 -ம் ஆண்டு வெளியான உதயன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து, 2012 -ம் ஆண்டு வெளிவந்த கார்த்தியின் சகுனி படத்தில் ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

அதன் பின்னர், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதுவும் பிளாஷ்பேக்கில் சில காட்சிகள் மட்டுமே வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2வது ரவுண்ட்!! இரண்டாம் முறை கர்ப்பமான சூர்யா பட நடிகை பிரணிதா.. | Actress Pranitha Second Time Pregnant Photos Viral

பிரணிதா, தொழிலதிபர் நிதின் ராஜூ என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு அர்னா என்ற மகள் இருக்கிறார். மகள் பெற்றப்பின்பும் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வந்த பிரணிதா, தற்போது இரண்டாம் முறை கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இந்த செய்தியை அறிவித்திருக்கிறார் நடிகை பிரணிதா.