காதலர் தினத்தன்று நடிகை பிரியா பவானி சங்கர் அவுட்டிங்!! எங்க போயிருக்காங்க பாருங்க..
Priya Bhavani Shankar
Valentine's day
Tamil Actress
Actress
By Edward
மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமாகினார் நடிகை பிரியா பவானி சங்கர். சின்னத்திரை நடிகையாக கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர், படங்களில் வாய்ப்பு பெற்று தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
இந்தியன் 2, டிமாண்டி காலணி 2, ரத்னம், ஜெப்ரா, பீமா போன்ற படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். பல ஆண்டுகளாக காதலித்து வரும் ராஜ் வேல் என்பவருடன் ரொமான்ஸ் செய்தும் அவுட்டிங் சென்றும் வரும் பிரியா பவானி, சமீபத்தில் ஆஸ்திரியா நாட்டிற்கு சென்று காதலரின் பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.
தற்போது காதலர் தினத்தன்று பிப்ரவரி 14 ஆம் தேதி ஸ்விட்சர்லாந்துக்கு சென்று காதலர் தினத்தை கொண்டாடி அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
